திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம்

பஞ்ச பூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவத்தையொட்டி சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 10 மணிக்கு மே‌‌ஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Popular posts
ஏப். 13ல் சபரிமலை நடை திறப்பு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு
சபரிமலை நடை ஏப்., 13 மாலை திறக்கப்படுகிறது. 'ஐந்து நாட்கள் நடைபெறும் பூஜைகளில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை' என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது
020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது
Image
தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது