விழாவையொட்டி வருகிற 21-ந் தேதி 8 திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும் மற்றும் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந்தேதி வெள்ளி மஞ்சத்திலும், 28-ந் தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 29-ந் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
30-ந்தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 9-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.
விழாவையொட்டி வருகிற 21-ந் தேதி 8 திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா